108 ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண்குழந்தை

108 ஆம்புலன்சில் பிறந்த  அழகான பெண்குழந்தை
X

ஆம்புலன்சில் பிறந்த அழகிய பெண் குழந்தை.

திருவாரூர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவமாகி அழகான பெண்குழந்தை பிறந்ததையடுத்து மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டி மேடு வடபாதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி கவிதா(27). இவர்களுக்கு 7-வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கவிதா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவிற்கு வலியேற்பட்டதையடுத்து 108 அவசர சேவை வாகனம் மூலம் திருவாரூர் மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருவாரூர் அருகே கோமல் என்ற இடத்தில் வரும்போது கவிதாவுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் 108 அவசர சேவை மருத்துவ உதவியாளர் மணிவேல் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு இருவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கவிதாவுக்கு மருத்துவ உதவி செய்த 108 அவசர சேவை மருத்துவ உதவியாளர் மணிவேல், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!