திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் அ.தி.மு.க.வினர் மனு தாக்கல்

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் அ.தி.மு.க.வினர் மனு தாக்கல்
X

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய அ.தி.மு..க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

திருத்துறைப்பூண்டி. முத்துப்பேட்டையில் இன்று முதற்கட்டமாக அ.தி.மு.க.வினர் 15 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்று அ.தி.மு.க.வினர் முதற்கட்டமாக 15 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதுவரை திருத்துறைப்பூண்டி நகராட்சியில் அ.தி.மு.க. வினர் 15 பேரும், பா. ஜ. க. கட்சியினர் 5 பேரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் ஒருவரும் சுயேட்சையாக 4 பேரும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் 6 சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு தினங்கனே மீதமுள்ள நிலையில் தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!