திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில்   அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க.வின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் சண்முக சுந்தரம் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!