முத்துப்பேட்டை அதிமுக கவுன்சிலர் கொலையில் 7 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும், கூலிப்படையினரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி அவர்களின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் மார்ச் (24-03-2021)ஆம் தேதி கண்ணன் என்ற குற்றவாளியையும்
(29-04-2021)ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் சின்னதுரை, கொம்பையா, முத்துக்குமார், வீரமணி, நாகராஜன், வள்ளிமுத்து, இசக்கிமுத்து (எ) போஸ் ஆகியோர்களையும் தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகுண்டுகள், கொலைக்கு பயன்படுத்திய கொடுவாள்,அரிவாள் போன்ற ஆயுதங்களையும், ஒரு நான்கு சக்கர வாகனத்தையும், (Scorpio car)நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் புதிதாக வாங்கிய சிம் கார்டுகள் மற்றும் செல்போன்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களையும் பிடிக்க தொடர்ந்து தனிப்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பாக செயல்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினரை கைது செய்த முத்துப்பேட்டை காவல் துறையினர் மற்றும் தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu