மக்கள் நல பணியாளர்கள் சங்கம் திமுகவிற்கு ஆதரவு: வீடு, வீடாக பிரசாரம்
.தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று திமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென பிரசாரத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் 1990 ல் நியமிக்கப்பட்டனர். 30 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் 20 ஆண்டுகளாக அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப் பட்டிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட பணி கிடைக்கவில்லை. மக்கள் நலப்பணியாளர் நடுத்தெருவில் நிறுத்தி வைத்த துர்பாக்கிய நிலையை அதிமுக அரசு செய்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில்
மீண்டும் பணி வழங்க நடவடிக்கை செய்யப்படும், இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வாங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஆதரித்து வரக்கூடிய தேர்தலில் வீடு வீடாக சென்று திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu