/* */

திருவாரூர்: திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்: திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம்
X

திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம்  நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் உள்ள 108 திவ்ய தேசங்களில் 23 வதாக விளங்குவதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றானதும், விஷ்ணு ஆலயமான ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் சித்திரைை பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.


கடந்த 07.04.2022 முதல் 18.04.2021 வரை நடைபெறும் சித்திரை திருவிழாவில் 11.04.2022 அன்று இரவு கருடசேவை நடைபெற்றதது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (16.05.2022) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து சித்திரைத் திருவிழாவானது வருகின்ற 18.04.2022 ம்தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவு பெறவுள்ளது..

Updated On: 16 April 2022 9:46 AM GMT

Related News