குடவாசல் அருகே தூக்கிட்டு பெண் சாவு கணவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது
நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் ஆன அனுசியா திருமணத்தின் போது கணவர் அருண்குமாருடன் எடுத்த புகைப்படம்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மரணமடைந்ததால் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
குடவாசல் அருகில் உள்ள உத்தரங்குடி கிராமத்தில் அனுசியா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அனுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனைக்கேட்ட அனுசியாவின் உறவினர்கள் அழுதுகொண்டே கூறும்போது அனுசியா காணவரும், அவரின் அண்ணனும் சேர்ந்து அடித்து தூக்கில் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள் என கதறி அழுதனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் விசாரணை மேற்கொண்டு கணவர் அருண்குமார் (28) மற்றும் கணவரின் அண்ணன் பிரேம்குமார் (30) ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார். உடனடியாக குடவாசல் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
இறந்து போன பெண்ணின் உடலைக் கைப்பற்றி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் திருமணப் பெண் இறந்த செய்தி அறிந்த அந்தப் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். உரிய விசாரணை செய்து இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஊர் மக்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu