/* */

திருவாரூரில் தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சிபிஎம் கோரிக்கை

திருவாரூரில்  தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும்  சிபிஎம் கோரிக்கை
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினைப் போக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். குடவாசல் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மருத்துவமனையில், ஐந்து நாட்களுக்கு முன்பு கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்தவர்களுக்குக் கூட தடுப்பூசிப் போட முடியாத நிலை உள்ளது.

மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்கும்போது, தடுப்பூசி இன்னும் வந்து சேரவில்லை என தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளனர்.

ஆனால் குடவாசல் போன்ற பல மருத்துவமனைகளில், பல நாட்களுக்கு முன்பு தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு செய்தவர்களுக்குக் கூட தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 5% பொதுமக்கள் மட்டுமே தற்போதுவரை தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளதாக, சுகாதாரத்துறைப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. தற்போது கொரோனா இரண்டாம் அலைக் கிராமப் பகுதிகளிலும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து, தேவையான தடுப்பூசிகளைப் பெற்று, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Updated On: 25 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது