மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

மது பாட்டில்கள் ஏற்றி வந்த  லாரி கவிழ்ந்தது
X
திருவாரூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

திருவாரூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அமராவதி வெட்டாறு பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மன்னார்குடியில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இந்த பாலத்தின் வழியாக காஞ்சீபுரம் நோக்கி சென்றது. லாரி பாலத்தின் அருகே உள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. ஆனால் லாரியில் ஏற்றி இருந்த மதுபாட்டில்கள் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்ததால் மதுபாட்டில்கள் சிதறாமல் அப்படியே இருந்தன. மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!