நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வருகைப் புரிந்த பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

கரோனாத் தொற்றின் இரண்டாவது பரவல் வேகமாகப் பொது மக்களைப் பாதித்து வருவதையொட்டி, அரிமா சங்கங்களின் சார்பாக பொதுமக்களுக்குக் கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதனையொட்டி நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பாக செவ்வாய்க்கிழமை, காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அரசு அலுவலகங்களுக்குப் பணி நிமித்தமாக வருகைப் புரிந்த பொதுமக்கள் ஆகியோர்களுக்கு அரிமா சங்கத்தின் நன்னிலம் கிளைச் செயலாளர் செல்.சரவணன் தலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவர் பி.ஆறுமுகம், பொருளாளர் கே.சுந்தர் உள்ளிட்ட அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்