நன்னிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் தீவிர அபராதம் வசூல்

நன்னிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் தீவிர அபராதம் வசூல்
X
நன்னிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கயை£க முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு தீவிரமாக அபராதம் வசூல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி நன்னிலம் வட்டத்தில் உள்ள சரக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்களுக்குரிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் முகக்கவசம் அணியாத வணிகர்களுக்கும் மற்றும் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் பயணிப்பவர்களுக்கும் தலா ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்து வருகின்றனர்.

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூர், பனங்குடிப் போன்ற பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் கு.கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார், பிரகாஷ்கண்ணன் ஆகியோர் வணிக வளாகங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதைப்போல நன்னிலம் வட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அந்தந்த வருவாய் ஆய்வாளர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் கரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதுவரை நன்னிலம் வட்டத்தில் 35 நபர்களிடமிருந்து தலா 200 ரூபாய் வீதம் 7000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் நா.கார்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story