நன்னிலம் பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நன்னிலம் பகுதியில் தொடர் மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் நன்னிலம் அருகே தோட்டகுடி, கீரங்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன..

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தீவிரமாக சம்பா பயிரிடும் பணிகள் நடைபெற்று முடிந்தது. சில தினங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிற்கு நிலங்கள் தண்ணீர் சூழ்ந்து வயல்களில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.இனிமேல் புதிதாக நாற்று நட்டு நடவு செய்யக் கூடிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், விவசாயிகள் மனமுடைந்து கவலையுடன் உள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ராமமூர்த்தி சொல்லும்போது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழகஅரசு நடவு செய்ததற்கான செலவுக்குரிய தொகை, விதைநெல், உரம், யூரியா உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கி, விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

Tags

Next Story