ஒரு கோடி ஸ்ரீராம நாம ஜெபம்

ஒரு கோடி ஸ்ரீராம நாம ஜெபம்
X
இராமநவமி - சாய்பாபா அவதாரநாளில், ஒரு கோடி ஸ்ரீராம நாம ஜெபம் பூந்தோட்டம் ஸ்ரீ சாய்பாபா கோயிலில் நடைபெற்றது.

ஸ்ரீசாய்பாபா அவதார தினத்தை முன்னிட்டும், ஸ்ரீராமநவமியை முன்னிட்டும் பூந்தோட்டம் சாய்பாபா கோயிலில் ஒரு கோடி ஸ்ரீராமஜெபம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூர் பகுதியில் ஸ்ரீசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை, சாய்பாபா பிறந்த தினம் மற்றும் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஸ்ரீசாய்பாபா மற்றும் ஸ்ரீராதாகிருஷ்ண மாயி அன்னை ஆகியோருக்குச் மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


சிறப்பு அலங்காரத்தில் நடைபெற்றத் தீபாராதனைக்குப் பின்னர், பக்தர்கள் பூந்தோட்டம் ஸ்ரீசாய்பாபா கோயிலிலும், இக்கோயில் அறக்கட்டளை வாயிலாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இணையத்தில் இணைந்த ஆயிரக்கணக்கானப் பக்தர்கள், மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை ஒரு மணி நேரத்தில், ஒரு கோடி ஸ்ரீநாமஜெப பூஜை நடத்தினர். பூஜைக்குப் பின்னர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசாய்பாபாவுக்கும், ஸ்ரீராதாகிருஷ்ணமாயி அன்னைக்கும் மகா தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானப் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூந்தோட்டம் ஸ்ரீசாய் பாபா கோயில் நிர்வாகி சாய் சுதாகர் மற்றும் சாய் சரவணன், விழுப்புரம் சாய் உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!