புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு

புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் நன்னிலம்  வட்டாட்சியர் குடியிருப்பு
X
புதர் மண்டிய நிலையில் உள்ளது நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு.
பயன்பாட்டில் இல்லாததால் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு புதர் மண்டி மோசமான நிலையில் உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றுபவர்கள் உள்ளூரிலேயே குடியிருக்கும் வகையில், அரசு அவர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த பல வருடங்களாக வட்டாட்சியர்கள் யாரும் குடியிருப்பை பயன்படுத்தாத காரணத்தினால் அந்த கட்டிடம் புதர் மண்டி பாழடைந்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஆகியவை உள்ளன. அந்த கட்டிடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ள நிலையில் அப் பகுதியின் வழியேதான் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உடனடியாக வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடத்தை சீரமைத்து அந்த கட்டிடத்தில் வட்டாட்சியர் குடியிருக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து நடை முறைப்படுத்த வேண்டும் என நன்னிலம் பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இதே போல பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பும் பாழடைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நன்னிலம் பகுதியைச் சார்ந்த நட. ஆறுமுகம் என்பவர் சொல்லும்போது

"கடந்த 20 வருடங்களாக இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது, அருகிலேயே பொதுப்பணித்துறை அலுவலகம் இருந்தும் கட்டிடம் பராமரிக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை என்றால் வீட்டிற்கு வந்து பார்க்கும் வகையில் குடியிருப்பை சரி செய்ய வேண்டும்." என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!