அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்
X
நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சத்துணவு மாணவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்னிலம் வட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கானத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைக்கேற்ப, ஏப்ரல் மாதத்திற்குரிய சத்துணவுப் பொருட்களான அரிசி, துவரம்பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை முதல் தினசரி நூறு பெற்றோர்கள் வீதம், மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, அவர்களிடம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளித் தலைமையாசிரியர்கள் முன்னிலையில், சத்துணவு அமைப்பாளர்கள் பொருட்களை வழங்கினார்கள்.

மாணவர்களின் பெற்றோர்கள் முகக்கவசமணிந்து, சமூக இடைவெளியுடன் பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!