காகித குடோனில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்.

காகித குடோனில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்.
X
திருவாரூர் அருகே காகித குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் காகிதங்களை உப்புக்கார தெருவில் உள்ள தனது வீடு அருகே ஒரு குடோனில் வைத்திருந்தார்.

இந்த குடோனில் இருந்து மாலை 4 மணி அளவில் திடீரென புகை வெளிவந்தது. இதையடுத்து அங்கு இருந்த ரவிச்சந்திரன் மற்றும் தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது காகிதங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் மார்த்தாண்டபூபதி தலைமையில் அங்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. காகித குடோனுக்கு அருகே பட்டாசு கடைகள் உள்ளன. இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேறு எங்கும் தீ பரவாமல் தக்க சமயத்தில் அணைக்கப்பட்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!