வலங்கைமான் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வலங்கைமான் ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, வெற்றி பெறுவதற்கு உழைப்பதை விட, பெற்ற வெற்றியை காப்பாற்றுவதுதான் முக்கியம். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தக் கூட்டத்தில் பாக நிலை முகவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் பாக நிலை முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ பூண்டி. கலைவாணன் ஆலோசனை வழங்கினார். அனைவரும் விழிப்போடு இருந்து திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தட்சிணாமூர்த்தி, பேரூர் செயலாளர் சிவனேசன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கரிகாலன் உட்பட ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!