ஏங்க....இ பாஸ் இருக்கா.? போலீசார் ஆய்வு
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.
"வாகன பரிசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், இ- பாஸ் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
கொரோனா தொற்று இரண்டாம் நிலை பரவல் உச்சகட்டத்தில் உள்ள நிலையில்,பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ- பாஸ் அவசியம் தேவை எனவும், இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்து.
இந்த நிலையில்.. மாநில, மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்பொழுது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உள்ளிட்ட குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்னிலம் பகுதியில் நன்னிலம் காவல்துறை உதவி ஆய்வாளர் காசிராமன் தலைமையில் காவல்துறையினர் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது, வெளி மாவட்ட வாகனங்களை இ - பாஸ் உள்ளதா என சோதனை செய்து, இல்லாதபட்சத்தில் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தனிமனித கட்டுப்பாடுதான் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க ஒரே வழி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu