ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
X

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவிரி விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாஜகவின் மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் 60 மாணவ மாணவிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் இந்த அராஜக போக்கை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகமான திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திடீரென கையில் தீப்பந்தத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஏ பி வி பி அமைப்பிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பல்கலைக்கழக வாசல் நோக்கி பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து மத்திய பல்கலைக்கழக வாசலில் ஜேஎன்யூ மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திடீரென நள்ளிரவில் தீப்பந்தத்துடன் மாணவர்கள் போராடியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!