நன்னிலத்தில் மம்தா பானர்ஜியைக் கண்டித்து பிஜேபி ஆர்ப்பாட்டம்

நன்னிலத்தில்  மம்தா பானர்ஜியைக் கண்டித்து பிஜேபி ஆர்ப்பாட்டம்
X
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மம்தா பானர்ஜியை க் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேற்கு வங்காளச் சட்டமன்ற தேர்தல் நேரத்திலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டப் பின்னரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், ஆறு பிஜேபியினரைக் கொலை செய்ததாகவும்,

நந்திகிராமம் மாவட்ட பிஜேபி அலுவலகத்தைத் தீ வைத்துக் கொளுத்தியதாகவும் தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்காளக் காவல் துறையினரையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வன்முறைகளையும் கண்டித்துப் புதன்கிழமை மாலை நன்னிலம் பேருந்து நிலையம் அருகே பிஜேபித் தெற்கு ஒன்றியத் தலைவர் சுகுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

மாவட்டச் செயலாளர் பாலபாஸ்கர், இளைஞரணித் தலைவர் சுரேஷ், நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவர் நாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும், 50க்கும் மேற்பட்ட பிஜேபியினரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல பேரளம் பேருந்து நிலையம் அருகே பிஜேபி வடக்கு ஒன்றியத் தலைவர் மாரியப்பன் தலைமையில் பிஜேபிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story