மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு

மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு
X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-

மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சியில் 17, 18, 19, வார்டுகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்ப்பட்டமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2011 - 2012 ஆம் ஆண்டு 3 இலட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டு திறக்கபடாமல் இருந்தது.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தை திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் திறந்து வைத்தார். இதில் மாணவரணி மாநில துணைதலைவர் சோழராஜன் , நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!