மன்னார்குடியில் நகை கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு

மன்னார்குடியில் நகை கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான  நகை திருட்டு
X

மன்னார்குடியில் திருடு போன நகைக்கடை

நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு; உள் லாக்கரை உடைக்க முடியாததால் 5 இலட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கீழபாலத்தில் உள்ள அர்ஜுன் நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 3 இலட்சம் மதிப்பிலான 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலிசார் நகை கடை உரிமையாளாிடம் விசாரணை செய்து வருகின்றனர். திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர் .

நகை கடையின் உள் லாக்கரை உடைக்க முடியாததால் 5 இலட்சம் மதிப்பிலான நகைகள் திருடர்களிடமிருந்து தப்பியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!