மன்னார்குடியில் குடிநீர் தொட்டி வழங்கி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

மன்னார்குடியில் குடிநீர் தொட்டி வழங்கி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

மன்னார்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா குடிநீர்  தொட்டி வழங்கி கொண்டாடப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மன்னார்குடியில் 1000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்கி கொண்டாடப்பட்டது.

மார்ச் 1ல் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன்ஒருபகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வானக்காரத்தெரு 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி சூரியபிரகாஷ் தலைமையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. கொடியேற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் மேலபத்மசாலை தெருவில் வசிக்கும் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதில் தி.மு.க. முன்னோடி நிர்வாகிகள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!