பெயிண்டர் அடித்து கொலை: காவல்துறையினர் விசாரணை

பெயிண்டர் அடித்து கொலை: காவல்துறையினர்  விசாரணை
X

கொலை செய்யப்பட்ட பாண்டியன்.

மன்னார்குடி அருகே பெயிண்டர் அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனரிடம் காவல்துறையினர் விசாரணை

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (45). பெயிண்டரான இவருக்கு மகேஷ்வரி (40) என்ற மனைவியும், மாதேஷ் (16), வினோத் (14) என இரண்டு மகன்களும் உள்ளனர். பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை அடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து 3 நாட்களுக்கு முன்பு பாண்டியன் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை செய்ததோடு மனைவியை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

அம்மாவை ஏன் அடிக்கிறாய் என மகன்கள் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் தனது மகன்களையும் அடித்துள்ளார். பின்னர், கடந்த 2 நாட்களாக பாண்டியன் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் இருந்து இன்று மாலை துர்நாற்றம் வீசியது. இதுக் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், மன்னார்குடியில் தீயனைப்பு வீரர்கள் வந்து, கிணற்றில் இறங்கி பார்த்த போது உடல் முழுக்க காயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு போர்வை மற்றும் படுக்கை பாயை சுற்றி கயிறால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. பின்னர், அந்த உடலை தீயனைப்பு வீரர்கள் கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்தவர் பெயிண்டர் பாண்டியன் என தெரிய வந்தது. இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில் கொலை செய்யப் பட்ட பாண்டியனின் மனைவி மகேஷ்வரி, மாமனார் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைந்து வந்தனர்.

அவர்களிடம் மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். பாண்டியன் உடலில் ரத்தகாயங்களுடன் போர்வையால் சுற்றப்பட்டு சடலாக கண்டெடுக்கபட்ட சம்பவம் பரவாக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்