/* */

திருவாரூர் அருகே சாலை வசதிக்காக போராடும் மேட்டாங்குளம் கிராம மக்கள்

திருவாரூர் அருகே சாலை வசதிக்காக மேட்டாங்குளம் கிராம மக்கள் 3 தலைமுறைகளாக போராடும் நிலை உள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே சாலை வசதிக்காக  போராடும் மேட்டாங்குளம் கிராம மக்கள்
X
திருவாரூர் அருகே மேட்டாங்குளம் கிராமத்திற்கு செல்லும் மண்சாலை.

திருவாரூர் மாவட்டம் கோரையாற்றின் படுகை பகுதியில் அமைந்துள்ளது பெருவாழ்ந்தான் மேட்டாங்குளம் கிராம். இக்கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். இக்கிராமத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல வேண்டுமென்றால் கோரையாற்றின் மேல்கரை பகுதியில் உள்ள ஆபத்தான ஒத்தையடி பாதையை கடந்து செல்ல வேண்டிய அபாய நிலையில் இருந்துவருகின்றனர்.

இத்தகைய ஒத்தையடிபாதையின் இருபுறமும் முள்மரங்களும், முட்புதர்களும், செடிகொடிகள் மண்டிகிடப்பதை காணும்போது ஏதோ காட்டுபகுதிக்கு செல்வதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பாதை இருந்து வருகிறது. ஒருபெட்டிகடை கூட இல்லாத நிலையில் உள்ள இக்கிராமத்தில் ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டுமென்றால் கூட ஒத்தையடி பாதையை கடந்து சென்றுவரவேண்டிய அவலநிலை.இக்கிராமத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் தங்களது அடிப்படை கல்வி பயில 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவதானம் என்ற கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களின் நிலையானது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருகவாழ்ந்தான் எனும் கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் மன்னார்குடி அல்லது திருத்துறைப்பூண்டி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்துவருகின்றனர். கல்லூரி முடிந்து வரும் தங்களது பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு சென்று அழைத்துவர வேண்டிய நிலையில் தினசரி பல்வேறு இடையூறுகளை அனுபவித்து வருகின்றனர். ஆகையால் மேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கல்லூரி படிப்பினை தொடர அனுமதிப்பதில்லை. மிககுறுகிய சாலையாக அதாவது ஆட்டோ கூட செல்லமுடியாத அளவிற்கு சாலையிருப்பதால் உடல் ஊனமுற்றவர்கள், முதியோர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் கட்டிலில் அவர்களை படுக்கவைத்து கிராமமக்கள் தூக்கிகொண்டு தேவதானம் என்ற கிராமத்தை அடைந்து அதன் பின்னர் கார் அல்லது ஆட்டோ வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டிய ஆபத்தான வாழ்க்கையினை கடந்த 3 தலைமுறைகாலமாக அனுபவித்து வருகின்றனர் மேட்டாங்குளம் கிராமத்தினர்.


இக்கிராம மக்களின் வாழ்க்கை என்பது மழைக்காலங்களில் ஒரு தனி தீவில் வசிப்பவதைபோன்று பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இக்கிராமத்திற்கு உள்ளேயும், வெளியேவும் யாரும் வந்துபோக முடியாது. குறிப்பாக இக்கிராம பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மழைக்காலங்களில் பள்ளி படிப்பை தொடர முடியாமல் ஆண்டு இறுதிதேர்வில் மதிப்பெண் குறைந்தும், தோல்வியும் அடைந்தும் கல்வியை தொலைத்துவிட்டு நிற்கின்றனர். இது ஒருபுறம் என்றால் சாலைவசதி இன்மையால் இக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்களை அக்குடும்பத்தினர் 8 மாதம் வரை இக்கிராமத்தில் வைத்துக்கொண்டு 9 மாதம் தொடங்கியவுடன் அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைத்துவிடும் அவலநிலையில் இக்கிராம மக்களின் நிலை இருந்துவருகிறது. ஆகையால் திருமண வயதுடைய ஆண்களுக்கு யாரும் பெண்கொடுக்க முன்வருவதில்லை. திருமண வயதுடைய பெண்களுக்கும் அதே நிலைதான்.

இக்கிராமத்தினர் ரேஷன் கடைக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிவர 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவதானம் கிராமத்திற்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இக்கிராமத்திற்கு வந்துசெல்ல வேண்டிய பாதை ஒற்றையடி பாதையாக இருப்பதோடு, பாம்பு, தேள் முதலான விஷப்பூச்சிகளோடு வழிப்பறி திருடர்களின் தொல்லையும் இப்பாதையில் அதிகமாக இருப்பதால் இரவு 6 மணிக்குமேல் இப்பாதையை இக்கிராம மக்கள் உபயோகிக்க அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

இந்தியா சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த போதிலும், கிராமத்தின் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற அண்ணல் மகாத்மா காந்தி கண்ட கனவு இன்றுவரை இக்கிராமத்தை பொறுத்தவரை கனவாகவே இருந்துவருகின்றன. இதுகுறித்து பல்வேறு காலகட்டங்களில் முதலமைச்சர்கள் தொடங்கி அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை பலமுறை எழுந்துமூலமாக நேரில் புகார் தெரிவித்தும் இதுவரை இந்த கிராமத்தை யாரும் எட்டிபார்க்க கூட முன்வரவில்லை என ஏங்கி தவிக்கும் இக்கிராமத்தினர் உடனடியாக ஆட்டோ செல்லும் அளவிற்காவது தார் சாலை, மற்றும் பாலம் அமைத்து தந்தால் கூட இப்போதைய நிலைக்கு போதுமானது என கூறுகிறார்கள்.

Updated On: 23 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  4. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  5. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  7. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  9. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க