மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி உற்சவத்தின் நிறைவாக தெப்பத்திருவிழா நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்றி விழாவின் கடைசி நாளான இன்று தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி உற்சவத்தின் நிறைவாக தெப்பத்திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி பிரம்மோட்சவம் மற்றும் விடையாற்றி என 30 தினங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலின் அருகே உள்ள கிருஷ்ண தீர்த்தம் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா இரவு நடைபெற்றது. ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் நவநீத சேவையில் காட்சியளித்து தெப்பத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்த பெருமாளை கரைகளில் திரண்டு நின்ற பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டனர். நாதஸ்வர இன்னிசை மற்றும் வாணவேடிக்கை என தெப்பத்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!