மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
X

ஸ்ரீஇராஜகோபாலசுவாமி கோயிலின் பங்குனி பெருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோபாலா கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஇராஜகோபாலசுவாமி கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தினமும் இரவு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று நடைபெற்று வருகிறது.

திருத்தேரில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேதராக ஸ்ரீஇராஜகோபால சுவாமி எழுந்தருளினார். கல்யாண திருக்கோலத்தில் காட்சியளித்த பெருமாளை, காலை முதல் ஏராளமான பக்தர்கள் தேரில் தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலின் 4 வீதிகள் வழியாக பக்தர்கள் கோபாலா கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க, வடம் பிடித்து தேரினை இழுத்தனர். வண்ண வண்ண துணிகள் மற்றும் பிரமாண்ட குதிரைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆடி அசைந்து வந்தது. வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!