எஸ்,வி.சேகர் பெண்களை இழிவாக பேசவில்லையா ? தமிமுன் அன்சாரி கேள்வி
திருவாரூர், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பூண்டி கலைவாணன் , டி.ஆர் .பி.ராஜா ஆகியோருக்கு தமிமுன் அன்சாரி உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமும் அன்சாரி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது இந்தமண் திராவிட இயக்கத்தோட பூமி. தந்தை பெரியார் இந்தியாவிற்கே வகுப்பு எடுத்த தாயகம். நம்மண்ணில் உத்திரபிரதேசம் , குஜாரத் கலச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ் மண்ணை தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் ஆள வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது. அதனால் பாஜகவை அனுமதிக்க கூடாது. பாஜக திராவிட கட்சியான அதிமுகவின் முதுகில் ஏறி தமிழகத்தில் சவாரி செய்ய திட்டமிடுகிறது. அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயகட்சிக்கு தொடர்ந்து அழைப்பு வந்தும் தமிழ் பற்றை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கூட்டணியை தூக்கி வீசிவிட்டு திமுக கூட்டணிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கட்சி சார்பற்ற பொதுமக்களின் மனநிலையை பார்க்கும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது. திமுக தலைமையான கூட்டணி 200க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வெற்றி பெறும். குறிப்பாக டெல்டா மாவட்டம் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கோட்டை இதனால் திமுக கூட்டணி 100% சதவிதம் வெற்றி பெறும். திமுக தலைமை சுட்டி காட்டி ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் அதை பற்றி யாரும் பேசகூடாது. எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளரை கேவலமாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுத்தார்களா? அவர் மன்னிப்பு எதுவும் கேட்டாரா? எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம். ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? பெண்களை பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu