நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலிதொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல்செய்ய ஏதுவாக தமிழக அரசு இம்மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்து வந்தது.
இத்தகைய சூழலில் இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா சாகுபடி பணிகள் சுமார் 3.75 லட்சம் ஏக்கருக்கு மேல் நடைபெற்ற நிலையில் அறுவடை பணிகள் பல்வேறுகிராமங்களில் முழுமை அடையாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மன்னார்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் முன்னறிவிப்பு இன்றி 50க்கும் மேற்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திடீரென இன்று மூடப்பட்டது.
இதனை கண்டிக்கும் வகையில், முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தியும் மன்னார்குடிஒன்றியத்திற்கு உட்பட்ட நாளாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மன்னார்குடி கீழப்பாலம்பகுதியில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் திருவாரூர் , திருச்சி,நாகை, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu