Thevar Dialogue in Tamil Lyrics-முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகள்..!

thevar dialogue in tamil lyrics-முத்துராமலிங்க தேவர்(கோப்பு படம்)
Thevar Dialogue in Tamil Lyrics
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
1957ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
Thevar Dialogue in Tamil Lyrics
கொள்கைகள்
ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
- தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
- சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை
- வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
- வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
- தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
- உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்
- அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
- யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.
Thevar Dialogue in Tamil Lyrics
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
இனப்பற்று என்பது
எல்லோருக்கும் தேவை.
அதை நல்ல காரியங்களுக்கு
பயன்படுத்துவது உத்தமம்
கெட்ட காரியங்களுக்கு
பயன்படுத்துபவன் மகாபாவி.!
தவறுகள் நடப்பது
கெட்டவர்களால்இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.
மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால் மட்டம்.
பெண்களை தாயாகவும்
தங்கையாகவும்
நினைப்பவர்களை தான்
மனிதன் எனலாம்.
தனியாக இருக்கும் போது
சிந்தனை செய்வதில் கவனம்
செலுத்துங்கள்.. கூட்டத்தோடு
இருக்கும் போது வார்த்தைகளில்
கவனமாக இருங்கள்.
Thevar Dialogue in Tamil Lyrics
ஞானிகள் அடக்கமாக
இருப்பார்கள் அவர்களின்
நிலையை சோம்பேறிகள்
நிலை என்று எண்ணுவது
தவறு.
மனிதன் ஆபாசங்களில்
எளிதில் சிக்கி விடுகிறான்.
அது அவனை குலைத்து
குன்றி விடுகிறது.
வீரம் அற்ற அகிம்சை
கபடம் எனும் மோசமான
நிலையை அடைந்து விடும்.
ஒழுக்கத்திற்கு என வைத்த
கட்டுப்பாடுகள் வயிற்றுப்
பிழைப்பிற்கென கைவிடப்பட்டன.
அதிக பணம் திரட்டும் ஆசையில்
ஒழுக்கம் அழிந்து விட்டது
கடவுளை தொழ வேண்டிய
விதம்.. தொழ நினைப்பவனுடைய
பக்குவத்திற்கு ஏற்றவாறு
பல வகைப்படும்.
நாகரிகத்தின் பெயரால்
ஒழுக்கத்தை கை விட்டதனால்
நாடெங்கும் கேடுகள்
பரவி விட்டன.
Thevar Dialogue in Tamil Lyrics
எல்லோரிடத்திலும்
தெய்வம் உண்டு.. ஆனால்
எல்லோரும் தெய்வத்துடன்
இல்லை.
நூறு ஏழைகள் ஒரு
பணக்காரனை உண்டாக்குகிறார்கள்.
ஒரு பணக்காரன் ஆயிரம்
ஏழைகளை உண்டாக்குகிறான்.
சாவுக்கு பயம் இல்லாதவனே
சாதிக்கும் சக்தியினை
பெறுகிறான்.
மனிதனை உயர்ந்தவர்
தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின்
பெயரால் மட்டுமே மரியாதை
கொடுக்க வேண்டுமே தவிர
சாதியை வைத்து அல்ல.
வீரம் என்ற குணம் தான்
எதிரியும் பாராட்டும்
நிலையை ஏற்படுத்தும்.
கோழைத்தனம்
அவ்வாறு செய்யாது.
Thevar Dialogue in Tamil Lyrics
அரசியல்
பதவி ஆசை பிடித்தவனுக்கு
அவனுடைய கை.. கால்கள்..
கூட எதிரியாய் மாறும்.
இன்றைய சட்டத்தால்
நீதி கொலை
செய்யப்படுகிறது.
பெண் ஆசை மற்றும்
மண் ஆசை இவ்விரு
ஆசைகளையும்
அறுத்துக் கொள்ளாதவன்
சரியான தொண்டனோ..
சரியான தலைவனோ
கிடையாது.
அரசியல் என்பது மக்கள்
மீது அதிகாரத்தை
செலுத்துவது இல்லை..
அரசியல் என்பது மக்களுக்காக
சேவை செய்வது.
Thevar Dialogue in Tamil Lyrics
நன்மைக்கு புறம்பானவற்றை
ஒழிப்பதில் அரசு ஆண்மையை
பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசியல்வாதிகள்
எல்லோரும் அரசியல்
தலைவர்களாக இல்லை. அரசியல்
வியாபாரிகள் ஆக மாறி விட்டார்கள்.
நீதியை நிலை நிறுத்துவதற்கான
சட்டங்கள் ஆதிகாலத்தில்
உற்பத்தி செய்யப்பட்டன.
இன்றைய நீதியானது சட்டத்திற்காக
கை நழுவ விடப்படுகிறது.
அடுத்த தலைமுறையை
சிந்திப்பவன் தேசியவாதி
அடுத்த தேர்தலை சிந்திப்பவன்
அரசியல்வாதி.
பணத்திற்கு மயங்கி வியாபார
அரசியலுக்கு வழி
செய்து விடக்கூடாது.
Thevar Dialogue in Tamil Lyrics
வியாபாரிகள் ஆக்கிரமிக்க
முயலும் அரசியலுக்கு
இடங்கொடுத்து விடாமல்..
விவசாய அரசியலை அமைத்து
நாட்டின் பண்பாட்டையும்
ஏழைகளின் நல்வாழ்வையும்
காக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu