திருட்டு வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

திருட்டு வழக்கில் இளைஞருக்கு   இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
X
திருட்டு வழக்கில் சிக்கிய உத்தமபாளையம் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24.) இவர் கோவிந்தன்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை பவுன் நகையினை திருடிச் சென்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு நடத்தினர். இந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 4000ம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்