தேனி அருகே இளைஞர் வெட்டிக் கொலை: தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

தேனி அருகே இளைஞர் வெட்டிக் கொலை: தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்.

முன்விரோதத்தால் இளைஞரை வெட்டிக் கொலை செய்த தந்தை, தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், கூடலுார் கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 20. இவரது நண்பர் அஜித்குமார், 27. இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து செல்லப்பாண்டி கூடலுார் வடக்கு போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 2016ம் வரும் அக்டோபர் 10ம் தேதி அஜித்குமாரின் வீட்டு வழியாக செல்லப்பாண்டி சென்றுள்ளார். அப்போது அஜித்குமார், அவரது தந்தை கண்ணன், 46, தாய் ராமுத்தாய், 42, அவர்களது 17 வயது மகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்லப்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் வாலிபரை கொலை செய்த அஜித்குமார், கண்ணன், ராமுத்தாய் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். மற்றொரு சிறுவன் மீதான விசாரணை சிறுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!