சிறுநீரக நோய்க்கு சித்த வைத்தியம் செய்த இளைஞர் பலி

சிறுநீரக நோய்க்கு சித்த வைத்தியம் செய்த இளைஞர் பலி
X

பைல் படம்.

சிறுநீரக நோய்க்கு தேனியில் சித்த வைத்தியம் செய்த மதுரை வாலிபர் உடல்நிலை மோசமடைந்து இறந்தார்.

மதுரை மாவட்டம், கார்சேரி ஊராட்சி சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 35. இவரது மனைவி பூமாதேவி, 32. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குணசேகரனுக்கு ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரித்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டயாலஸிஸ் போன்ற உயர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் தேனி மாவட்டம், நாகலாபுரம்- பாலகிருஷ்ணாபுரம் பிரிவில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற குணசேகரன் முடிவு செய்தார். அங்கு மதிய உணவாக கசாயம் கொடுத்துள்ளனர். அதனை குடித்ததும் குணசேகரன் உடல்நிலை மோசமடைந்தது. அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வழியில் உயிரிழந்து விட்டார். இது குறித்து பூமாதேவி கொடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்