தாய் மாமனை கொலை செய்த வாலிபர் தலைமறைவு

தாய் மாமனை கொலை செய்த வாலிபர் தலைமறைவு
X

பைல் படம்.

தனது சொந்த தாய்மாமனை கொலை செய்த வாலிபர் தலைமறைவானார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ், 67. கட்டட தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்தார். இவரது தங்கை மகன் குமார், 30 என்பவரும் இவருடன் வசித்து வந்தார். இரவில் இவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குமார் கல்லால் தனது மாமனை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மரியதாஸ் இறந்து விட்டார். உடனே குமார் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!