பெண்ணை கொன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெண்ணை கொன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
கூடலுாரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கொன்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

கூடலுாரை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவர் கடந்த மாதம் 17ம் தேதி கூடலுாரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்தார். இவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கலெக்டர் முரளீதரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி