அண்ணாமலையின் நடைபயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குவது ஏன் தெரியுமா?

அண்ணாமலையின் நடைபயணம் ராமேஸ்வரத்தில் இருந்து   தொடங்குவது ஏன் தெரியுமா?
X

அகில இந்திய பா.ஜ., தலைவர் நட்டாவுடன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்க காரணம் என்ன? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக நடைபயணம், இல்லை இதர பயணமென்றாலும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது தான் மரபு. தென்முனை எனும் வகையில் எக்காலமும் நடைமுறையில் தான் அது இருந்து வருகிறது. ஆனால் அண்ணாமலை பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகின்றது. இது பெரும் கவனம் பெறுகின்றது. ராமேஸ்வரம் என்பது சாதாரண ஊர் அல்ல. அதன் பெருமை அதிகம். அவ்வழியாகத்தான் ராமபிரான் பெரும் போரை முடித்து விட்டு அயோத்தி திரும்பி அரசனாக முடிசூடினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று விட்டு அவ்வழியாகத்தான் பாரத தேசம் அடைந்து அதன் பின் பெரும் எழுச்சியினை ஏற்படுத்தினார். அதன் பின்பே பெரும் இந்து எழுச்சி வந்தது. யோசித்து பார்த்தால் அயோத்தி ஆலயம் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நேரம் ராமேஸ்வரம் ஏதோ ஒரு இணைப்பை சொல்லும் இடமாக இருக்கலாம்.

இங்கே அமித்ஷா வருகின்றார். அவர்தான் நடைபயணத்தை தொடங்கி வைக்கின்றார் என்பது மேலும் கவனிக்கத்தக்கது. ஆக இதெல்லாம் கலந்து யோசித்தால் விஷயம் தேசிய அளவில் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நடைபயணத்தை அகில இந்திய அளவில் கொண்டு செல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் ஆழமாக யோசித்தால் காசியில் எம்.பி.யாக இருக்கும் மோடி ராமேஸ்வரத்திலும் போட்டியிட வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. இதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

சரி இனி இந்த பயண காட்சிக்கு வரலாம். அண்ணாமலை நடந்து செல்கின்றார், அதுவும் ராமன் பாதம்பட்ட ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுக்க நடக்கின்றார். அதாவது எல்லோருக்கும் வாழ்வு தர விருப்பம் கொண்ட ராமன் அங்கே சிவனை பணிந்து நின்றான், அப்போது தேவர்கள் அவனை வாழ்த்தினார்கள் என்கின்றான் கம்பன். இதே தேவர்களின் வாழ்த்துக்கள் அண்ணாமலைக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட இந்த நடைபயணம் இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Tags

Next Story