விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு

விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு
X

தேனி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்த சிவசேனா நிர்வாகிகள்.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று 250 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என தேனி மாவட்ட சிவசேனா கட்சி அனுமதி கேட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் மாநில பொறுப்பாளர் குருஐயப்பன், மாவட்ட தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் செழியன், மாவட்ட பொருளாளர் கணேசன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் உட்பட அக்கட்சியினர் தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், வரும் ஜூலை 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தேனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 250 இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து, வழிபட உள்ளோம். ஆகஸ்ட் 2ம் தேதி தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உள்ளோம். இதற்கு தேவையான பாதுகாப்பும், அனுமதியும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
ai based agriculture in india