இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிராம கோயில்களில் வழிபாடு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிராம கோயில்களில் வழிபாடு
X

தேனி கே.ஆர்.ஆர்., நகர் காளியம்மன் கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு தடைக்கு பின்னர் இந்த ஆண்டு கிராம கோயில்களில் திருவிழா, வழிபாடு மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளாக எந்த கோயிலிலும் வழிபாடுகள் நடைபெறவில்லை. சில கோயில்களில் ஆகம விதிகளுக்காக பூஜாரிகள் மட்டும் வழிபாடுகளை செய்து வந்தனர்.

நடப்பு ஆண்டு கொரோனா தடை விலகி விட்டதால், கிராம கோயில்களில் வழிபாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த அத்தனை கோயில்களும் திறக்கப்பட்டு பங்குனி, சித்திரை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த திருவிழாக்கள் வைகாசி மாதம் இறுதி வரை நடைபெறும். ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் விழா கொண்டாடுவார்கள். இரண்டு ஆண்டுகள் விழா கொண்டாடவில்லை என்பதால் இந்த ஆண்டு ஐந்து நாள் விழா கொண்டாடுகின்றனர் என ஆன்மீக நண்பர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக தேனி மாவட்டத்தில் அத்தனை கோயில்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story