க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
X

க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆண்டிபட்டி தாலுகா, க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னன்படுகை, குமணன்தொழு, மயிலாடும்பாறை, தும்மக்குண்டு, மொட்டனுாத்து உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இப்பகுதிகளில் இப்போதே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், நுாற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகத்தை சீரமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!