சாம்பல் சாப்பிட்ட பெண் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
X
பைல் படம்.
By - Thenivasi,Reporter |11 July 2022 9:22 AM IST
தேனி அருகே தொடர்ந்து பல ஆண்டுகளாக சாம்பல் சாப்பிட்டு வந்த பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
போடி குரங்கனி அருங்குளத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 25. இவருக்கு சிறு வயது முதலே சாம்பல் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் திருமணம் நடந்த பின்னரும் முத்துலட்சுமி இந்த பழக்கத்தை கை விடவில்லை. இதனால் முத்துலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அருங்குளத்தில் தனது சித்தி வீட்டில் தங்கியிருந்த முத்துலட்சுமி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்தார். குரங்கனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu