உக்ரைன் போரில் தோல்வியை தவிர்க்க அணுகுண்டை பயன்படுத்துமா ரஷ்யா?

உக்ரைன் போரில் தோல்வியை தவிர்க்க  அணுகுண்டை பயன்படுத்துமா ரஷ்யா?
X

பைல் படம்

ரஷ்யா தனது பிராந்தியமாக அறிவிக்கப்பட்ட நான்கு இடங்களில் இருந்து இரண்டே நாட்களில் அவசர அவசரமாக வெளியேறி வருகிறது

அதாவது உக்ரைனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள். அப்படி அப்படியே. போட்டது போட்டபடி தான் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறிகொண்டு இருக்கிறது.

அப்படி என்றால் உக்ரைன் ரஷ்ய மோதலில் ரஷ்யா தோற்றுவிட்டதா. என்றால், ஆம் ரஷ்யா இந்த போரில் பெரும் சரிவை சந்தித்துள்ளனர் என்றே உறுதியாக கூற முடியும். ப்ரோ ரஷ்யன்ஸ் என சொல்லப்படும் ரஷ்ய ஆதரவாளர்கள் நிரம்ப இருக்கும் லூக்கான்ஸ் மற்றும் டொனட்ஸ் எனும் டொன்பாஸ் பிராந்தியத்தில் வரும் மிக முக்கியமான இடமான லைமன் என்கிற இடத்தில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற, உக்ரைனிய படைகள் சப்தம் இல்லாமல். சண்டை செய்யாமல் கைப்பற்றிக் கொண்டு முன்னேறி வந்துகொண்டே இருக்கிறார்கள்.இன்னமும் சரியாக சொன்னால் 2014 ஆண்டுக்கு முன்பிருந்த இடங்களை எல்லாம் தங்கள் ஆளுகைக்குள் மீட்டெடுத்து இருக்கிறார்கள் உக்ரேனியர்கள். சரி ரஷ்யா என்ன சொல்கிறது. என்ன செய்ய போகிறது?

இந்த பிராந்தியம் நீண்ட நாட்களாக மறைமுகமாக ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த வந்த போதிலும், கடந்த வார இறுதியில் தான் இதனை தங்களுடைய பகுதியாக ரஷ்யா அறிவித்திருந்தது. இதன் பின்னணியில் வேறோர் திட்டமிடலும் இருப்பதாக மேற்குஉலக நாடுகள் சந்தேகப்படுகின்றனர். இதுநாள் வரை உக்ரைன் ரஷ்யா மோதலாக சொல்லப்படும் இந்த சண்டையை இரண்டு நாடுகளும் இதுவரை போராக அறிவிக்கவில்லை. இப்பொழுது தீடீரென அறிவிக்கப்பட்டுள்ள ரஷ்ய பகுதிகளில், அதாவது டொன்பாஸ் பிராந்தியத்தில் வரும் நான்கு இடங்களில் உக்ரேனிய வீரர்கள் உட்புகுந்துள்ள இந்த சமயத்தில், தங்கள் நாட்டில் ஊடுருவியதாக சொல்லி, அவர்கள் மீது சிறிய அளவிலான அணு ஆயுத தாக்குதல் நடந்த விளாடிமிர் புட்டீன் திட்டமிட்டு வருவதாக மேற்கு உலக நாடுகள் சந்தேகம் எழுப்பி உள்ளன.

ஒரு வேளை இது நடந்தால்.இந்த சண்டை முழு உலகையே உலுக்கும் போராக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஏன் ரஷ்யாவிடத்தில் இந்த திடீர் மனமாற்றம்? ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் வரவிருக்கும் நிலையில், ரஷ்யாவில் இருந்து சுவீடன் டென்மார்க் வழியாக வரும் நார்டு ஸ்டீம் பைப் லைன் மூலம் எரிவாயு செல்லும் குழாய்களை கடந்த வாரத்தில் மட்டும் நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் உடைத்து விட்டனர். இதனை ரஷ்யர்கள் தான் செய்தனர் என ஒரு கூட்டமும், இல்லை இதனை செய்தது அமெரிக்கா தான், அதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என ரஷ்யர்களும் சண்டை போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமே வரவிருக்கும் கடும் குளிர் காலத்தை நினைத்து பயந்து போய் இருக்கிறது.

போதாக்குறைக்கு பொருளாதாரம் பலத்த அடி வாங்கி வருகிறது அங்கு. இதிலிருந்து அவர்கள் மீண்டெழ குறைந்த பட்சம் நான்கு முதல் ஏழு ஆண்டுகள் பிடிக்கும். இதன் தீவிரத்தன்மை இங்கிலாந்தை கடுமையாக பாதிக்கும். இங்கிலாந்திற்கு ஏற்பட்ட இதே நிலையை ரஷ்யாவிற்கும் கொண்டு வர அமெரிக்கா விரும்புகிறது. இன்னமும் சரியாக சொன்னால் அந்த நாட்களில் மொத்த ஜெர்மனியையும் முதல் உலகப் போரை காரணங்காட்டி நசுக்கியது போல இன்று ரஷ்யாவை நசுக்க அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் விரும்புகின்றன.

இதனை புட்டீன் உணராமல் இல்லை. ஆனால் ரஷ்யர்கள் இவரோடு உடன் படாமல் தனித்து நிற்க விரும்புகிறார்கள். ஆதலால் முழு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மொத்த ரஷ்ய பிரஜைகளும், தங்கள் கைகளை பாதுகாப்பாக உடைத்துக்கொள்வது என்று இணையதளத்தில் தேடி இருக்கிறார்கள். அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டீனின் உத்தரவுக்கு கட்டுப்படாமல், அதாவது ராணுவத்தில் இணைத்துக்கொள்ளாமல் அங்கு இருந்து வெளியேறவே விருப்பம் தெரிவித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உலகையே உலுக்கி வருகிறது.

இவையெல்லாம் மனதளவில் ரஷ்யர்கள் மத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சி தான் உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் வெளிப்பட்டிருக்கிறது. இதனை மீட்டெடுக்க பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார் விளாடிமிர் புட்டீன். நீண்ட கால நோக்கில் இவரது செயல் திட்டங்கள் சரி என்ற போதிலும். இன்று உள்ள ரஷ்ய மக்களிடத்தில் போதிய வரவேற்பு இல்லை என்பது தான் இதில் உள்ள கவனிக்க வேண்டிய சமாச்சாரம். அநேகமாக வரவிருக்கும் குளிர் காலம் ஒட்டு மொத்த உலகையே புரட்டிப் போட இருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

Tags

Next Story