/* */

மூணாறு- கொடைக்கானல் பகுதிகள் சாலை மூலம் தரை வழியாக இணைக்கப்படுமா?

Kodaikanal Munnar Road - மூணாறையும், கொடைக்கானலையும் தரைவழியாக இணைக்க வேண்டும் என்பது வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

மூணாறு- கொடைக்கானல் பகுதிகள் சாலை மூலம்  தரை வழியாக இணைக்கப்படுமா?
X

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு பகுதி.

Kodaikanal Munnar Road -மூணாறையும் கொடைக்கானலையும் தரைவழியாக இணைக்க வேண்டும் என்பது வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூரில் வாழும் தமிழர்களின் 75 ஆண்டுகால கனவு.இந்த ரோடு கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை வழியாக செல்கிறது. அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடைய வேண்டும்.தொடர்ந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைகிறது. இந்த ரோட்டின் பெயர் எஸ்கேப் ரோடு.

இந்தப் பாதை உருவாவதற்கு முன்னாலேயே, வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த ரோடு தற்போது வரை பயன்பாட்டிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்து விட்டனர். கேரள அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்கேப் ரோட்டை மறித்து ,அதை பாம்பாடும் சோலை தேசிய பூங்காவாக அறிவித்தது. முன்பு இருதரப்பு பயணத்திற்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்ட கேரள மாநில அரசு,இப்போது டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டில் சங்கிலியைப் போட்டு இழுத்துப் பூட்டியது.

ஜீப்களில் இந்த ரோட்டில் பயணித்து வந்த தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத் துறையால் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ரோட்டை இழுத்துப்பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை வட்ட வடை கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழும் தமிழர்கள் மீது திணித்திருக்கிறது கேரள மாநில அரசு.

விரைவில் இந்த சாலையை திறக்க வேண்டும் என்று இந்த 28 கிராம தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்து போராடியாவது இந்த ரோட்டை அமைக்க முயற்சிப்போம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மலைக்கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...