உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியா சமரசம் செய்யுமா?

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியா சமரசம் செய்யுமா?
X

பைல் படம்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால் மோடியின் பிரதிநிதியாக புட்டினை சந்தித்து வந்த சில நாட்களில் காட்சிகள் மாறின

அமெரிக்க, பிரான்ஸ் அதிபர்களை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு பிரதமரும் மோடியினை தொடர்பு கொண்டு பல விஷயங்களை பேசியிருக்கின்றார், அவரும் உக்ரைன் விவகாரத்தில் மோடி நல்ல முடிவினை எட்ட உதவ முடியும் என சொல்லியிருக்கின்றார். இன்னும் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மோடியினை தொடர்பு கொள்கின்றார்கள், ஜப்பானில் நடைபெறும் இந்திய ஜப்பானிய கூட்டு ராணுவப்பயிற்சி தொடர்பாக ஜப்பான் அரச பிரநிதிகளும் இந்திய பிரதமரோடு நல்ல தொடர்பில் இருக்கின்றார்கள்.

ஆக எல்லோரும் மோடியிடம் ஏதோ ஒரு விஷயத்தை எதிர்பார்த்து வலிய அழைக்கின்றார்கள். அவரால் மட்டும் தற்போதைய உலகில் அமைதியினை ஏற்படுத்த முடியும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். இந்திய அமெரிக்க உறவிலே மிகப்பெரிய விமான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் அமெரிக்காவில் மோடிக்கான செல்வாக்கு அதிகரிக்கின்றது. ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை அவை உக்ரைன் யுத்தத்தை பெரிதாக விரும்பவில்லை. அது அமெரிக்க தலையீட்டால் நடப்பது என்பதை உணர்ந்துள்ளன. அதே நேரம் அமெரிக்காவினை பகைக்க அவை தயாரில்லை என்பதையும் பல சம்பவங்கள் காட்டுகின்றன.

மோடியினை அவை அழைக்கும் ரகசியமே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான பஞ்சாயத்துக்கு என்றாலும் உள்ளூர அமெரிக்காவிடம் பேசும் செல்வாக்கும் பலமும் மோடியிடம் இருப்பதாக மட்டும் அவை நம்புகின்றன. மோடி இப்பொழுது நேருவின் அணிசேரா கொள்கையினை தூக்கி எறிந்து இந்தியாவுக்கு எது நல்லதோ அந்த அணி என அறிவித்த கொள்கை உடையவர். அவருக்கு இப்போது எதிரிகள் இல்லை, பாகிஸ்தான் நொறுங்கி கிடக்கின்றது. சீனா உலகுக்கு எதிரி என்பதால் அது இந்தியாவின் தனிப்பட்ட விரோதி அல்ல. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான பலமான நாடு எனும் வகையில் மோடியின் இந்தியா இப்பொழுது உலகுக்கு மிக விருப்பமான நாடு. இதனால் வாசலில் வரிசையாக நின்று மோடியினை அழைக்கின்றார்கள்.

ஓ மேல்நாட்டவர்களே, நீங்கள் குகையிலும் காடுகளிலும் உணவுக்கும் உடைக்கும் ஏங்கி நின்ற காலங்களிலே இந்தியர்கள் வேதமும், அறிவும், ஞானமும் பெற்றிருந்தவர்கள். நீங்கள் கடலை தாண்ட படாதபாடுபட்டு இன்னொரு தேசத்தை அறிய முயன்ற காலத்தில் மானிடரை அறிந்து பூமியினை அறிந்து இந்த பிரபஞ்சத்தை அறிந்து கரையேறியவர்கள் இந்தியர்கள். உணவு , செல்வம், அதிகாரம், அஹங்காரம், ஆடம்பரம் என்பது தான் வாழ்க்கை என வாழ்ந்தவர்கள் மேற்கு உலகத்தினர். அன்பு அதுவும் எல்லா உயிரும் இறைவனின் வடிவமே, எனும் உன்னத கொள்கை ஒன்றே ஆதாரம் என வாழ்ந்தவர்கள் இந்தியர்கள். இந்து மதம் எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவில்லை. மாறாக பல கோடி மக்களை செல்வத்தில் வாழவைத்தது. மேற்கு உலகம் போரும் ஆயுதமும் கொண்டு உலகை சுரண்ட ஆரம்பித்த வெகுகாலத்துக்கு முன்பே இந்தியா அன்பும் அறமும் சமாதானமும் பேரன்பும் கொடுத்த தர்மமான நாடு.

போரினாலும் குழப்பத்தாலும் ஓடிவரும் எல்லா மத இன மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்தது இந்திய நாடு.எல்லோரும் இறைவடிவம் எல்லோரையும் அன்புசெய் என்பதுதான் இந்தியர்களின் வேதாந்தம் இந்து மதத்தின் ஆதாரம். ஓ போர்பிரியர்களே, வன்முறையால் எதனை சாதிப்பீர்கள்? எப்படி அமைதியினை நிறுவுவீர்கள், லௌகீகத்தை தேடி தேடி நீங்கள் நடத்தும் வன்முறையால் ஒருநாள் சலித்து போவீர்கள். அப்பொழுது எங்கள் பூமிதான் உங்களின் எல்லா ஏக்கத்துக்கும் பதில் கொடுக்கும் தர்ம பூமியாக விளங்கும், அது நடந்தே தீரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் இந்து தர்மம் அதற்காகவே இங்கு நிலைபெற்றிருக்கின்றது, எத்தனையோ பேரால் அது நினைத்தாலும் அவர்கள் பெருமுயற்சி செய்தாலும் அது மறுபடி மறுபடி துளிர்த்து நிற்பது உலகுக்கு ஒரு நாளில் பெரும் அன்பும் சமாதானமும் கொடுப்பதற்காகவே என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கு கண்முன் நிஜமாகும் நேரமிது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!