விளைந்த பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

விளைந்த பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

காட்டுபன்றி - கோப்புப்படம் 

தேனி மாவட்டத்தின் மேகமலை மலையடிவாரங்களில் விளைந்துள்ள மானாவாரி பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, சின்னமனுார், கம்பம் ஊராட்சி ஒன்றியங்கள் மேகமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்கள் சிறுதானியங்கள் விளைந்துள்ளன. பல இடங்களில் நெல் விளைந்துள்ளது.

இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் தின்று அழித்து வருகிறது. இதனால் தங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறி உள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பலத்த மழை பெய்து வருகிறது. கிடைக்கும் மழையினை வைத்து விவசாயிகள் பல்வேறு மனாவாரி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை தொடங்கினாலும், பல இடங்களி்ல் பால்பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் உள்ளன. இப்படிப்பட்ட பக்குவமான பருவத்தில் உள்ள பயிர்களை சாப்பிடுவது காட்டுப்பன்றிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில், நன்கு விளைந்த பயிர்களை உண்பதற்கு மலையடிவார நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன. வேலி போட்டும் இவற்றை தடுக்க முடியவில்லை. விளைந்த பயிர்கள் இப்படி வீணாகிறதே என வருத்தமாக உள்ளது. மொத்தமாக காட்டுப்பன்றிகள் வரும் போது, விவசாயிகள் உயிர்தப்ப ஓடி ஒளிய வேண்டி உள்ளது. காட்டுப்பன்றிகளை துரத்துவது இயலாத காரியம். பல இடங்களில் நெற்பயிர்களை கூட காட்டுப்பன்றிகள் விட்டு வைக்கவில்லை. என்று கூறினார்.

எனவே, விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்

Tags

Next Story