ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும்?
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டையக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது. ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடைபெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.
அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு தாலியின் மகிமை நன்கு புரியும்.
மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
★ தெய்வீகக் குணம்
★ தூய்மைக் குணம்
★ மேன்மை
★ தொண்டு
★ தன்னடக்கம்
★ ஆற்றல்
★ விவேகம்
★ உண்மை
★ உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்பெறுகின்றது.
கணவன் வாழும் வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இந்த தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.
மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் செயல்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்லப்படுகிறது.
கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu