நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடு NDAவில் தொடர காரணம் என்ன?

நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடு NDAவில் தொடர காரணம் என்ன?
X
நிதிஷ்குமாரும், சந்திரபாபுநாயுடுவும் NDAவில் தொடர்வதை தவிர அவர்களுக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை.

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272.

NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே. தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் - 7. அது போன்று சந்திரபாபு நாயுடு வெளியேறினால் ஜெகன் மோகன் ரெட்டி தனது உறுப்பினர்கள் 4 பேருடன் NDAவிற்கு ஆதரவு அளிப்பார். சுயேச்சைகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவுடன் NDAவிற்கு மெஜாரிட்டி கிடைத்து விடும். அதாவது சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இல்லாமலேயே...NDAவின் ஆட்சி தொடரும்.

இந்த கதை நமக்கே தெரியும்போது மேற்கண்ட இருவருக்கும் தெரியாதா... அதுவும் சந்திரபாபு நாயுடு பட்டு தெளிந்து வந்துள்ளார்... மத்தியில் அவருக்கு தோதான அரசு இருந்தால் மட்டுமே மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியும் என்று அவருக்கு தெரியும்.

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால் மீண்டும் 5 ஆண்டுகள் NDA தெளிவாக ஆட்சி செய்யும் என்பது மற்றும் இஷ்டத்திற்கு யாராலும் பாஜகவை வளைக்க முடியாது. வழக்கம் போல் பிரதமர் மோடியின் பலம் மிகுந்த ஆட்சி தொடரும். தெளிவான, கடினமான முடிவுகளை எடுக்க மோடி தயங்கவும் மாட்டார்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?