என்னப்பா எல்லாரும் வெளிய போறாங்க?: ஜியோ இழப்பால் அம்பானி அதிர்ச்சி

என்னப்பா எல்லாரும் வெளிய போறாங்க?: ஜியோ இழப்பால் அம்பானி அதிர்ச்சி
X

முகேஸ் அம்பானி.

ஜனவரி மாதத்தில் 93 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. எனினும், அண்மைக்காலமாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 93.8 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர் என ட்ராய் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஜியோ நிறுவனம் மட்டும் 93 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. மேலும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஏர்டெல் நிறுவனம் 7.1 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

எனினும், ஒட்டுமொத்த சந்தையில் பார்க்கும்போது அதிக வாடிக்கையாளர்களுடன் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் 35.49% பங்கை கொண்டுள்ளது. அடுத்த இடத்தில் ஏர்டெல் 31.13% பங்கை கொண்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 23.15% பங்கையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 9.95% பங்கையும், எம்டிஎன்எல் நிறுவனம் 0.28% பங்கையும் கொண்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு மார்க்கெட்டில் ஜியோ நிறுவனம் குறுகிய காலத்திலேயே அசுரத்தனமான வளர்ச்சியை தொட்டது. ஆனால் அண்மைக்காலமாக ஜியோ தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

ஜியோ நிறுவனம் கட்டணங்களை உயர்த்தியதே வாடிக்கையாளர்கள் வெளியேறக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஜியோ நிறுவனம் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்து வருவது முகேஷ் அம்பானிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வருத்தத்தை அவரே வெளிப்படுத்தி உள்ளார்.

Tags

Next Story
ஆத்தூர் அருகே ஆசிரியர் வீட்டில் டூவீலர் திருட்டு! போலீசார் விசாரணை