கேரளாவிற்கு ஏன் தண்ணீர் திறந்தீர்கள்? துரைமுருகனுக்கு ஓ.பி.எஸ். கேள்வி

கேரளாவிற்கு ஏன் தண்ணீர் திறந்தீர்கள்?  துரைமுருகனுக்கு  ஓ.பி.எஸ். கேள்வி
X

பைல் படம்

இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. எனவே ரெக்கார்டுகளில் இருப்பதை அவர்கள் தான் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்

பெரியகுளத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்ற தேதிகளை குறிப்பிட முடியுமா என அமைச்சர் துரைமுருகன் கேட்டுள்ளார். நான் முல்லைப்பெரியாறு பகுதிக்கு சென்று வந்த தேதிகள் பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் ரெக்கார்டுகளில் பதிவாகி இருக்கிறதா என்றும் அமைச்சர் கேட்டுள்ளார். விளம்பரத்திற்காக செல்பவர்கள் தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள். இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. எனவே ரெக்கார்டுகளில் இருப்பதை அவர்கள் தான் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் என்னோடு வந்தார்கள். அவர்கள் பணியில் இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நான் கேரளாவிற்கு தண்ணீர் திறந்தது பற்றி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு 27. 2 .2006 அன்று வெளிவந்த பின் அந்த தீர்ப்புக்கு எதிராக 18. 3 .2006 அன்று கேரள அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்திலேயே வழக்கு தொடுக்கப்பட்டது. தேர்தல் முடிந்து 2006ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும், மத்தியிலும் திமுக அங்கம் வகித்த ஆட்சி தான் நடைபெற்றது. ஆனால் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்தவரை, முல்லைப் பெரியாறு அணை வழக்கில், ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அமைச்சர் குறிப்பிட்டது போல, வழக்கிற்கான நம்பர் மட்டும் தான் பெறப்பட்டது. இதைத்தான் சட்டென்று விட்டுவிடுவதாக அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவிக்கிறார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள போராட்டம் முக்கியமான தேவை. இதை விவசாயிகள் பெரிதாக எதிர்பார்த்து உள்ளார்கள். பழுதுபார்க்கும் பணிகள் முழுமையாக முடிந்தவுடன், அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். திமுகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ள செல்வாக்கை, நெருக்கத்தைப் பயன்படுத்தி, கேரள அரசின் அனுமதியைப் பெற்று பழுதுபார்க்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஓபிஎஸ்.

Tags

Next Story