அண்ணாமலை சொன்ன அந்த நண்பர்கள் யார்?
அண்ணாமலை (பைல் படம்).
‘எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே என் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் . என் வீட்டு வாடகை , காருக்கு டீசல் , எனது ஊழியர்களின் ஊதியம் எல்லாமே நண்பர்கள் கொடுக்கிறார்கள் என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாருமே எனது நண்பர்கள் கொடுக்கின்றார்கள் என்று சொல்லுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை ஒரு மாதத்திற்கு 3.25 லட்சம் ரூபாய் . இந்த வாடகை யார் கொடுக்கிறது? காருக்கு டீசல் யார் அடிக்கிறார்? என் மனைவி என்னை விட பல மடங்கு சம்பாதிக்கிறார் என்று சொன்னார் . அப்படி இருக்கும் போது எதற்காக அடுத்தவர்களின் பணத்தில் வாழ வேண்டும் .
படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது என்ற வசனம் போல பயன்படுத்துவது தான் . ஆனால் எல்லாம் மற்றவர்களுடையது என்று சொல்ல ஒரு அரசியல்வாதியாக அசிங்கமாக இல்லையா? கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அங்கு இருக்கும் தலைவரின் நிலை என்ன?. சாப்பாடு, சம்பளம், கார், வீடு எல்லாம் ஓசியில் இருக்கும் மூளையும் ஓசி என நினைக்கிறேன் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ், எனக்கென்னமோ மாசம் ஏழெட்டு லட்சம் ரூபாய் உங்களுக்கு கொடுத்து உதவுற அளவுக்கு வசதியான வகையறாக்கள் இப்போதைய நிலையில் எடப்பாடி தரப்புத் தானோன்னு தோணுது.. என்று கூறியிருக்கிறார்.
தவிர சோசியல் மீடியாக்களில் ‘வீட்டு வாடகை, ஊழியர் சம்பளம், ஓசி கார், ஓசி டீசல், ஓசி சாப்பாட்டு செலவுக்கு கொடுத்து உதவும் நண்பர்கள் தேவை’’ என்ற மீம்ஸ்கள் களை கட்டி வருகின்றன. எது எப்படியிருந்தாலும், ‘அண்ணாமலை செய்தது சரி. அவர் தொடங்கியது மிகப்பெரிய போராட்டம். இந்த போர்க்களத்தில் அவர் மிகவும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதிய புரட்சி. ஊழலுக்கு எதிரான போராட்டம். இதில் பதிலடியும் கடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்து தானே அண்ணாமலை தொடங்கி உள்ளார். இதனால் பதிலடியை பற்றி கவலைப்படாமல் அண்ணாமலை தொடர்ந்து போராட்டம் நடத்துவார். காரணம் அவருக்கு பின்னணியில் இருப்பது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான். இவர்கள் எந்த சூழலில் இருந்தும் அண்ணாமலையை பாதுகாப்பார்கள். இனிமேல் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கலாம் என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu