இயற்கை அறிவா? செயற்கை அறிவா? எது எதிர்கால உலகை ஆளும்?

இயற்கை அறிவா? செயற்கை அறிவா?  எது எதிர்கால உலகை ஆளும்?
X

AI technology-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.(கோப்பு படம்)

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல கோடி பேரின் வேலை இழப்புக்கு காரணமாக இருக்கப் போகிறது.

விஞ்ஞான உலகில், மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள், மற்றும் மாற்றங்களை, ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு, இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது, ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனைப் போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது. மனிதனைப் போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இவை தொடர்பான, அதிக அளவிலான தகவல்களை, கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.கணினியைக் கொண்டு, ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும், (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது. அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது.


இதனை கொண்டு, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். அத்துடன் பயனாளர்களுக்கு, எந்த பதிவுகளை அளிக்க வேண்டும்? என்பது தொடர்பாக,ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும், இத்தொழில்நுட்பம் உதவலாம். வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய, அமேசான் நிறுவனத்தை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளைக் களையவும், இந்த நவீன தொழில்நுட்பத்தை, அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ChatGPT மற்றும் snapchat’s My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும், சக்தி வாய்ந்த பயன்பாடுகள்; அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக, மிகுந்த கவனம் பெற்று வருகின்றன. ChatGPT மற்றும் snapchat’s My AI ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு, சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன. அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, ‘சாட்பாட்’ எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது. கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், கணினி மென்பொருளை எழுதவும், இந்த செயலிகளை பயன்படுத்தலாம்.

ஆனால் இவ்விரண்டு செயல்களின் பயன்பாடும் பயனர்களுக்கு சில நேரங்களில், தவறான முடிவுகளை அளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்பதை நிர்வகிக்க, சில விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், இத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி, ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.‘ஏஐ’ தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக கருதப்படும், ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலையில் இருந்து, கடந்த மாதம் விலகினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விரைவில் மனிதனை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஹிண்டனின் பணி விலகலைத் தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து, ஆராய்ந்து வரும் மையம், கடந்த மாதம் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, அச்சம் தெரிவித்துள்ளது. சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில், தவறான தகவல்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், இத்தொழில்நுட்பத்தால் மனிதர்களை விட இயந்திரங்கள், புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அத்தகையதொரு மோசமான நிலை, மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால், ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள, கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்துகிறார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப தலைவரான மார்கிரேட் வெஸ்டேஜர்.

ஒரு சார்பு நிலை, மற்றும் பாகுபாட்டைப் பெருக்கும் ‘ஏஐ’ இன் தொழில்நுட்பத் திறன், மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று பிபிசியிடம் அவர் கூறியுள்ளார். தான் கட்டிய கூட்டில், தானே சிறைப்பட்டு இருக்கும் கூட்டுப் புழு போல, மனிதர்கள் வாழ்வும், எதிர்காலத்தில் அமைந்து விடுமோ? இவைகளில் இருந்து, விடுதலை பெற்று, இன்ப வாழ்வு வாழ, மெய்ஞானம் ஒன்றே, சரியான வழியாகும் எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு